விஜய் டிவி “ராஜா ராணி 2” சித்து, ஸ்ரேயாவிற்கு நாளை திருமணம் – வெளியான மெகந்தி நிகழ்ச்சி வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சித்து, ஸ்ரேயாவிற்கு நாளை திருமணம் - வெளியான மெகந்தி நிகழ்ச்சி வீடியோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சித்து, ஸ்ரேயாவிற்கு நாளை திருமணம் – வெளியான மெகந்தி நிகழ்ச்சி வீடியோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து, அவரது காதலி ஸ்ரேயாவை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் மெஹந்தி நிகழ்ச்சி வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

சித்து ஸ்ரேயா திருமணம்:

சில நாட்களாக சின்னத்திரை ஜோடிகள் திருமணம் செய்திகள் தொடர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது. முதலில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா, விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் இருவருக்கும் கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன் பின் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்த ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் கடந்த 15 ஆம் தேதி கோலாகலமாக நடத்தப்பட்டது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் நாடியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதில் சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த இரண்டு ஜோடிகளும் திடீரென திருமணம் குறித்து அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து தனது காதலியான ஸ்ரேயாவை திருமணம் செய்ய இருக்கிறார். இன்று மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க – நெட்டிசன்கள் குமுறல்!

அதில் செம அழகாக மணப்பெண் ஸ்ரேயா மெஹந்தி போட்டுக் கொள்ள சித்து ஷ்ரேயாவின் பெயரை மெகந்தியில் எழுதி இருக்கிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து வந்தனர். அதன் பின் தற்போது அவர்கள் காதல் கல்யாணத்தில் முடிந்துள்ளது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் நாளை (நவம்பர் 20) நடைபெற இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!