‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க – நெட்டிசன்கள் குமுறல்!

0
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க - நெட்டிசன்கள் குமுறல்!
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க - நெட்டிசன்கள் குமுறல்!
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜாவை எலிமினேட் பண்ணுங்க – நெட்டிசன்கள் குமுறல்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது எவிக்சனாக வெளியேற்றப்பட்ட அபிஷேக், தற்போது நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் வெளியாகி உள்ளது.

வைல்ட் கார்டு என்ட்ரி:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒரு போட்டியாளர் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் எவிக்சனாக வெளியேற்றபட்டுவார்கள். இது வரை நிகழ்ச்சியில் இருந்து நமீதா, நாடியா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா மற்றும் அபிஷேக் ஆகியோர் வெளியேறி உள்ளனர். இதில் அபிஷேக் இரண்டாவது போட்டியாளராக வெளியேறியவர். அபிஷேக் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் நன்மதிப்பை பெற தவறிவிட்டார். அதிக சர்ச்சைகளை வீட்டிற்குள் உருவாக்கி சண்டை போட்டு வந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன்களின் போது வெளியில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசிய விஷயங்கள் அனைத்தும் பகிரப்பட்டு பெரிய விவாதங்களுக்கு உள்ளானது.

பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி – விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ அடுத்தகட்ட கதைக்களம்!

மேலும், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரிடமும் அவரது கருத்தை மட்டுமே திணித்து வந்தார். மற்ற போட்டியாளர்களின் கருத்துக்களை மதிக்காமல் நடந்து கொண்டார். இதனால் மக்களின் வாக்குகளை பெற தவறி வெளியேற்றப்பட்டார். ஆனால் நிகழ்ச்சியில் 50வது நாள் நெருங்கி விட்டது. பொதுவாக இந்த சமயத்தில் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் அனுப்பப்படுவார். இது தொடர்பாக, பலரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்த போது, அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அபிஷேக் ராஜா மீண்டும் போட்டியில் நுழைந்துள்ளார். இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவான கருத்துக்களையும், ஒரு தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ரசிகர்களின் கமெண்டுகள் இணையத்தில் பரவி வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் – ரசிகர்கள் வாழ்த்து!

வனிதா பிக்பாஸ் சீசன் 3யில் ரீ என்ட்ரி கொடுத்த போது எப்படி இருந்ததோ அப்படி தான் உள்ளது. அந்த விரக்தியை என் மனதில் இருந்து விரட்டியது மீரா மிதுன் தான். இந்த சீசனில் அந்த மாதிரி யாராவது வருவாங்களா என்று ஒரு போட்டியாளரும், மற்றொருவர் அபிஷேக் ராஜா மீண்டும் வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர். மக்கள் நினைப்பது போல் அவர் அவ்வளவு மோசமானவர் அல்ல. ராஜு போன்று மோசமானவர் அல்ல. தனது கருத்துக்களை நேராக தெரிவிக்க கூடியவர் என்றும், இன்னொருவர், நம்ம வேலை மெனக்கட்டு ஓட்டு போட்டு வெளியே அனுப்புவோமாம்… இவங்க நோகாம திரும்பவும் உள்ளே அனுப்புவாங்களாம் என்று பதிவு செய்துள்ளார். மற்றொரு ரசிகர் அபிஷேக் முறையாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இனி தான் ஆட்டம் ஆரம்பமாக உள்ளது என்று வைரஸின் எமோஜியை பதிவு செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here