பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி – விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ அடுத்தகட்ட கதைக்களம்!

0
பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி - விறுவிறுப்பாகும் 'பாரதி கண்ணம்மா' அடுத்தகட்ட கதைக்களம்!
பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி - விறுவிறுப்பாகும் 'பாரதி கண்ணம்மா' அடுத்தகட்ட கதைக்களம்!
பிரசவ வலியால் உயிருக்கு போராடும் அஞ்சலி – விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ அடுத்தகட்ட கதைக்களம்!

வெண்பாவின் சூழ்ச்சியினால் கடத்தப்பட்டு தற்போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலியின் உயிருக்கு அடுத்த ஆபத்து நெருங்கி இருப்பதாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய கதைக்களம் வெளியாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கோர்ட் சம்பத்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் அஞ்சலியின் கடத்தல் சீன்கள் இந்த கதையில் சில பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை பாரதி, கண்ணம்மாவை வைத்து நகர்ந்து வந்த கதைக்களம் அடுத்து அஞ்சலியை மையமாக வைத்து தொடர இருக்கிறது. இந்த சீரியலில் இப்போது தான் பாரதி, கண்ணம்மாவுக்கு இடையே பிரச்சனைகள் முடிந்திருக்கும் நிலையில் அடுத்த பிரச்சனை அஞ்சலிக்கு எழுந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் – ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் பாரதியை பழிவாங்குவதற்காக அஞ்சலியை கடத்தி வைத்திருக்கும் வெண்பா அவரை கொலை செய்ய சொல்லி கட்டளை போட்டிருக்கிறார். அதனால் கோவிலுக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்ட அஞ்சலிக்கு தற்போது பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் அஞ்சலியை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார் அகிலன். இது எதுவும் தெரியாமல் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் விவாகரத்து ஆகிவில்லை என சௌந்தர்யா மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்போது வில்லன்களிடம் மாட்டி இருக்கும் அஞ்சலி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி – ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!

ஆனால் அவள் ஏமாற்றுவதாக கூறும் கண்ணம்மாவின் மாமா அவரை அப்படியே விட்டு விட்டு செல்கிறார். இப்படி இருக்க தற்போது, பிரசவ வலியால் துடிக்கும் அஞ்சலியை காப்பாற்றாவிட்டால் கண்டிப்பாக அஞ்சலிக்கும், அந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. ஏற்கனவே வெண்பா கொடுத்த மருந்தினால் உடலளவில் பாதிக்கப்பட்டிருக்கும் அஞ்சலி, பிரசவத்தை குறித்து பயந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் இந்த கடத்தல் சம்பவமும் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல வெளியாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here