முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை – சிலிர்க்க வைக்கும் 10 வருட காதல்!

0
முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை - சிலிர்க்க வைக்கும் 10 வருட காதல்!
முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை - சிலிர்க்க வைக்கும் 10 வருட காதல்!
முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை – சிலிர்க்க வைக்கும் 10 வருட காதல்!

சின்னத்திரை நடிகை தனலட்சுமி தனது முதலாம் வருட திருமண நாளில் தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

10 வருட காதல்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த அனு கதாபாத்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அனு கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை தனலட்சுமி நடித்திருந்தார். இவர் யாரடி நீ மோகினி தொடரில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் எந்த சீரியல் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்துடன் நன்கு ஒன்றி விடுவார். இவர் சீரியலில் மட்டுமல்லாது சிறு வயது முதலே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் – சூரிய நமஸ்காரம் டூ இட்லி!

இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிவா என்பவரை காதலித்து வந்தார். தனது காதலருடன் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜீ தமிழ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முதலே இந்த ஜோடி மிகவும் பிரபலம். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்தி வந்தனர். இந்த ஜோடி எப்போதும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் அதிக ஆக்ட்டிவாக இருப்பார்கள். பல நட்சத்திர ஜோடிகளையும் ஜோடியாக சேர்ந்து கப்புல் கோல்ஸ் டார்கெட்களை விளையாட்டாக கொடுத்து வந்தனர்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!

இதனால் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் முதலாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. தங்களது திருமண நாள் கொண்டாட்டத்தின் போட்டோ மற்றும் வீடியோக்களை தங்களது அதிகாரபூர்வ இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். அதில், நடிகை தனலட்சுமி இந்த 10 வருட காதல் மற்றும் நம்பிக்கை மற்றும் 1 வருட திருமண வாழ்க்கை ஆகியவற்றுக்கு எல்லா நேரங்களிலும் என் அன்பானவருக்கு நான் சொல்ல வேண்டியது உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி என்று கணவரை குறிப்பிட்டுள்ளார். இந்த காதல் தம்பதிகளுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!