சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

0
சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு - செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு - செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவானவை. தற்போது சென்னைப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி படிப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தேர்வுகள் தேதி வெளியீடு:

எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட தொலைநிலைக் கல்வி மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டப்படிப்புகள் பயின்று வருகின்றனர். பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், மீண்டும் படிக்க வேண்டும் என நினைத்தால் தொலைநிலைக் கல்வி முறை நல்ல வழி. புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களும், தான் செய்யும் தொழில் சார்ந்த முறையான படிப்பை படிக்க வேண்டும் என நினைப்பவர்களும் கூட இந்த கல்வி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பணிக்கு செல்பவர்களும் பகுதி நேரமாக படிக்கும் வாய்ப்பை தொலைநிலைக் கல்வி வழங்குகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, அரசுப் பணிக்குச் செல்வதற்கான போட்டித் தேர்வுகளில் தான் முழு கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கும் பலருக்கும், தொலைநிலைக் கல்வி முறை கை கொடுக்கிறது. அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் பதவி உயர்வுக்கு தேவையான படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கின்றனர். இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களை படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இருப்பினும் தற்போது அனைத்து நிறுவனங்களும் திறக்கப்பட்டு வகுப்புகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகிறது. தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் இளநிலை, முதுநிலை பட்ட, பட்டய, சான்றிதழ் படிப்பு தேர்வுகள் 28 ல் தொடங்குகிறது என பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் தொலைநிலைக் கல்வி திட்ட படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை, ஹால் டிக்கெட் ஆகியவைகளை மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!