விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மகா சங்கமம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' & ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் மகா சங்கமம் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' & ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் மகா சங்கமம் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மகா சங்கமம் – ப்ரோமோ ரிலீஸ்!

தமிழ் சின்னத்திரையில் முதன்முறையாக விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் மற்றும் ஜீ தமிழ் “செம்பருத்தி ” சீரியல் இணைந்து மகா சங்கமம் சிறப்புத்தொகுப்பு குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மகா சங்கமம் சிறப்பு தொகுப்பு:

சின்னத்திரை சீரியல்கள் அனைத்தும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது. சாமானிய மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக மாற்றி இருப்பதே வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அந்த வகையில் பல குடும்ப கதைகளை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் டாப் வரிசையில் இருக்கிறது. அதில் பல திருப்பங்கள் தினமும் நடைபெறுவதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதைக்களம் செல்கிறது.

‘விஜய் டிவி’ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் & அமீர்? ரசிகர்கள் ஷாக்!

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அதிகமாக கடவுள் நம்பிக்கை சார்ந்த காட்சிகள் வரும். இவ்வாறு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலும், விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலும் மகா சங்கமம் நடத்த இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் வெவ்வேறு சேனல்கள் மகா சங்கமம் நடத்துவது இதுவே முதன்முறை ஆகும்.

மக்களின் அபிமான “குக் வித் கோமாளி சீசன் 3” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த ப்ரோமோ அதிகாரபூர்வமானது இல்லை என்றாலும், உண்மையாகவே இது நடக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மக்களுக்கு பிடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஒரே இடத்தில் சங்கமித்தால் அது சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். எனவே இது நிஜத்தில் நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!