மக்களின் அபிமான “குக் வித் கோமாளி சீசன் 3” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
மக்களின் அபிமான
மக்களின் அபிமான "குக் வித் கோமாளி சீசன் 3" விரைவில் தொடக்கம் - ப்ரோமோ ரிலீஸ்!
மக்களின் அபிமான “குக் வித் கோமாளி சீசன் 3” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக விஜய் டிவி இருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்துமே புது விதமான கன்டென்ட் உடன் இருக்கும் அதனாலே நிகழ்ச்சிகள் எத்தனை சீசன் வந்தாலும் வெற்றி பெறும். அந்த வகையில் ஒரு நகைசுவை கலந்த சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்பாராத வகையில் மக்கள் ஆதரவு கிடைத்தது.

உண்மை சம்பவத்தை கையில் எடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – எதிர்ப்பும், ஆதரவும்!

முதல் சீசனில் பிக் பாஸ் புகழ் வனிதா வெற்றி பெற்றார். அடுத்ததாக இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் நடிகை விஜியின் அக்கா கனி வெற்றி பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் சமையல் செய்த குக்குகளும் நல்ல பிரபலமடைந்தனர். அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து தற்போது பிசியாக இருக்கின்றனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் சாதாரண காமெடியனாக வந்த நடிகர் புகழ் தற்போது வெள்ளித்திரையில் சிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் தாமரை? ரசிகர்கள் கொந்தளிப்பு!

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், ஷிவாங்கி என பலர் பிரபலமாக இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் முடங்கி இருந்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல ஆறுதலாக இருந்தது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மணிமேகலை, சுனிதா, பாலா, ஷிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். மேலும் நடுவர்களாக செப் தாமு மற்றும் வெங்கட் இருக்கின்றனர். இந்த சீசனும் மாபெரும் வெற்றி பெறும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!