பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் – அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் - அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் - அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் – அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் நடிகரும், ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் நடிகையும் காதலிப்பதாக செய்திகள் தகவல்கள் வந்துள்ளது. இதனால் சின்னத்திரையின் அடுத்த ஸ்டார் கப்பிள் இவர்கள் தான் என்ற சொல்லப்படுகிறது.

பிரபல ஜோடி:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலில் நடித்து வரும் ஷபானா, இந்த தொடரின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் தனது கடின உழைப்பின் காரணமாக தான் தற்போது சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இதேபோல், விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன், தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி? ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்!

செம்பருத்தி ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் இருவரும் காதலித்து வருவதாக பல மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தனர். ஆனால் அவ்வப்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் மோதிரம் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் இவர்களுக்கு உண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்று கூறி வந்தனர்.

சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!

இது எதைப் பற்றியும் அறிவிக்காத இந்த ஜோடி, தொடர்ந்து தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஒரே சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையர் காதலித்து திருமணம் செய்து கொள்வது நடந்துள்ளது. ஆனால் வெவ்வேறு சேனல்களில் நடிக்கும் இவர்கள் காதலிப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரின் ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் அடுத்த சின்னத்திரையின் பிரபல ஜோடியாக ஷபானாவும், ஆர்யனும் வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!