சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!
சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!

சன் டிவி ரோஜா சீரியலில் அஸ்வினை காதலித்து அவர் பின்னால் அனு சுற்ற, பூஜாவை அஸ்வினுடன் சேர்த்து வைக்க ரோஜா மற்றும் அர்ஜுன் திட்டமிடுகின்றனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரோஜா ப்ரோமோ:

ரோஜா சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் செண்பகம் தான் ரோஜாவின் அம்மா என்ற உண்மையை குடும்பத்திற்கு சொல்ல ரோஜாவும், அர்ஜுனும் சேர்ந்து பல திட்டங்களை அமல்படுத்துகிறார்கள். தற்போது பூஜா மற்றும் அஸ்வினை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். மேலும் அதற்கு தடையாக அனு இருக்கிறார். அவர் அஸ்வினை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

கதிரின் பேச்சை கேட்காத முல்லை, பயத்தில் கண்ணன் & ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ட்விஸ்ட்!

ஆனால் அஸ்வின் பூஜாவை காதலிக்கிறார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அர்ஜுன் பேய் வருகிறது, பேய் வருகிறது என அணுவை பார்த்து சொல்ல, பூஜா மறைந்து கொள்கிறார். அப்போது அணு அஸ்வினுக்கு பால் கொடுத்து நான் தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி என சொல்கிறார். உடனே பூஜா அஸ்வினை பின் பக்கம் இருந்து அடிக்க அஸ்வின் கத்துகிறார்.

‘காற்றுக்கென்ன வேலி’ & சித்தி 2 சீரியல்களில் இருந்து விலகியது ஏன்? கண்ணீர் மல்க கூறிய வீணா வெங்கடேஷ்!

உடனே அணு நீங்க பூஜாவை மறைத்து வைத்து மூவரும் என்னை ஏமாத்துறீங்க என கேட்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் இப்போது தான் சீரியலில் விறுவிறுப்பு கூடி உள்ளது என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் தற்போது ரோஜா சீரியல் 1000வது எபிசோட் நெருங்க இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். செண்பகத்திற்கு ரோஜா தான் தன்னுடைய மகள் என்ற உண்மை எப்போது தெரிய வரும் என ஆவலுடன் இருக்கிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!