தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு செல்வமகள் திட்டம் – ரூ.50,000 வரை பெறலாம்!

0
தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு செல்வமகள் திட்டம் - ரூ.50,000 வரை பெறலாம்!
தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு செல்வமகள் திட்டம் - ரூ.50,000 வரை பெறலாம்!
தமிழக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு செல்வமகள் திட்டம் – ரூ.50,000 வரை பெறலாம்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் செல்வமகள் திட்டம். இத்தகைய செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதன் மூலம் பெண்குழந்தை வைத்திருப்பவர்கள் ரூ.50,000 வரை பெறலாம்.

செல்வமகள் திட்டம்:

தமிழகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதனை பாரமாக நினைக்காமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின் கடமை ஆகும். அதாவது பெண் பிள்ளை பிறந்தால் அதனை படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப வேண்டும், பின்னர் திருமணம் செய்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் வரும் என்பதால் பெண் குழந்தைகளை பாரமாக எண்ணி வருகின்றனர். இத்தகைய எண்ணத்தை மாற்றி பெண்களை பாதுகாக்கும் விதமாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம்.

தமிழகத்தில் நாளை (நவ.29) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் பெண் சிசு கொலை, பெண்களின் மதிப்பை உயர்த்துதல், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் கல்வி அளித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவைகளை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் பதிவு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கு தொடர்ந்தவுடன் அந்த குழந்தையின் பேரில் அரசு ஒரு தொகையை அரசு ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்துவிடும். பின்னர் அந்த குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

அதிலும் அந்த குழந்தை குறைந்த பட்சம் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டு பெண்குழந்தைகள் பெற்ற, ஆண்குழந்தைகள் இல்லாத பெற்றோர்கள் தகுதியானவர்கள். ஒரு குழந்தை என்றால் ரூ.50,000 வழங்கப்படும். இரண்டு பெண்குழந்தை என்றால் ஒரு குழந்தைக்கு ரூ.25,000 என்று பிரித்து வழங்கப்படும். 2 குழந்தைகள் உடைய, குடும்ப வருமானம் ரூ.72,000 க்கு குறைவாக இருக்கும் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புநிதி பத்திரம் பெற்றுள்ளவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அந்த தொகையை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் போது சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் வைப்புநிதி அசல் /நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளி பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!