தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து – சீமான் எதிர்ப்பு!!

0
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து - சீமான் எதிர்ப்பு!!
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து - சீமான் எதிர்ப்பு!!
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து – சீமான் எதிர்ப்பு!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர் பதவியை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் .

சீமான் கண்டனம்:

தமிழகத்தில் புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அரசு இயங்கி வருகிறது. இந்த அரசு தற்போது கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. மறுபுறமாக மற்ற துறைகளையும் கவனித்து தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் செய்து வருகிறது. தற்போது பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்து அதற்கு பதிலாக ஆணையர் நியமித்து அவருக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 3 மற்றும் 4வது அலை பரவல் – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!

இது கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த நிர்வாகிகள் இவர்களுக்கிடையே எந்த கருத்தும் கேட்காமல் தமிழக அரசு இம்முடிவை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ் படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச்சிக்கல்கள் முடிவு எடுக்கும் திறன் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது மற்றும் அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, மாணவர்கள், ஆசிரியர்களின் நலனை மனதிற்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ஆணையமாக மாற்றும் அரசாணையை ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையிலிருந்த முறையையே பின்பற்ற வேண்டும் என அறிக்கை மூலமாக தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!