தீவிரமடையும் கொரோனா, மாநிலத்தில் வரும் 24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

0
தீவிரமடையும் கொரோனா, மாநிலத்தில் வரும் 24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல் - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தீவிரமடையும் கொரோனா, மாநிலத்தில் வரும் 24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல் - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தீவிரமடையும் கொரோனா, மாநிலத்தில் வரும் 24-ந் தேதி வரை பள்ளிகள் மூடல் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் விகிதம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால், பொது நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைந்த தனியார் பள்ளிகள் ஜூலை 24-ஆம் தேதி வரை மூடப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்:

இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் கூட தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூலை 16 ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் மாநிலத்தில் தொற்று பரவல் வீரியமடைந்து கொண்டிருப்பதால் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை என முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார். மேலும், 12 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் இன்னும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிக கவனம் செலுத்தி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

மேலும், கொரோனாவின் வீரியத்தை கருத்தில் கொண்டு கட்டாயமாக பொதுமக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here