அக்.4ம் தேதி 5 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
அக்.4ம் தேதி 5 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.4ம் தேதி 5 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.4ம் தேதி 5 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட மாநில அரசு, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் 5 லிருந்து 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பதாக அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கி பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்திலும், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறக்கும் இந்த செயல்முறை படிப்படியாக மேற்கொள்ளப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் சென்னையில் அறிமுகம் – முழு விபரம் இதோ!

அந்த வகையில் முதல் கட்டமாக மஹாராஷ்ரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 முதல் 12 வரையிலான வகுப்புகள் நேரடி முறையில் துவங்க உள்ளன. இதனுடன் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் 8 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்காக தொடங்க இருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், ‘மஹாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் முழுவதுமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

NTA நுழைவுத்தேர்விற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் – UPSC இணையதள வெளியீடு!

அதுவரை குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை அமைக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இப்போது கொரோனா 3 ஆம் அலை பாதிப்புகள் மஹாராஷ்டிராவை அதிகமாக தாக்காத பட்சத்தில் தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!