‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் சென்னையில் அறிமுகம் – முழு விபரம் இதோ!

0
'ஒரு தேசம் ஒரு அட்டை' திட்டம் சென்னையில் அறிமுகம் - முழு விபரம் இதோ!
'ஒரு தேசம் ஒரு அட்டை' திட்டம் சென்னையில் அறிமுகம் - முழு விபரம் இதோ!
‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் சென்னையில் அறிமுகம் – முழு விபரம் இதோ!

அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் பயன்படும் வகையில் ஒரு தேசம் ஒரு அட்டை எனும் திட்டம் டெல்லியை தொடர்ந்து 2022ல் சென்னையில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு தேசம் ஒரு அட்டை:

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. வங்கி பணபரிமாற்றம், ஷாப்பிங், பயண டிக்கெட் உட்பட பல விதமான சேவைகளை ஒரே கார்டில் பெறும் வகையில் மொபிலிட்டி கார்டு எனப்படும் ‘ஒரு தேசம் ஒரு அட்டை’ திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NTA நுழைவுத்தேர்விற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் – UPSC இணையதள வெளியீடு!

தற்போது மக்களிடம் டெபிட், கிரெடிட் கார்டு என பல்வேறு கார்டுகள் உள்ளது. அத்தனை கார்டுகளுக்கும் மாற்றாக இந்த ஒரு தேசம் ஒரு அட்டையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இனி ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கார்டை பயன்படுத்த தேவையில்லை, இந்த மொபிலிட்டி கார்டை வைத்திருந்தால் போதும். பணப் பரிவர்த்தனைகள் செய்யலாம், பயணம் செய்வது, ஷாப்பிங் போன்றவற்றிற்காகவும் பயன்படுத்தலாம்.

இது மக்களின் சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார்டானது 2022 ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார்டின் மூலம் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் போன்ற அனைத்துவித போக்குவரத்துகளுக்கும் பயணம் மேற்கொள்ள பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கார்டு குறித்து விளக்கியுள்ளோம், இந்த புதிய சிஸ்டத்தை புத்தாண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஏற்கனவே இருக்கக்கூடிய மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் மூலம் ரயில் பயணம் செய்யலாம் மற்றும் ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் பயன்படுத்தலாம். ஆனால் மொபிலிட்டி கார்டுகள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதால் பல்வேறு வழிகளில் இந்த கார்டை பயன்படுத்த முடியும், இனி வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி கார்டுகள் என்றில்லாமல் ஒரு கார்டு போதும் என்ற நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!