SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Myntra, Amazon, Flipkart 15% தள்ளுபடி!

அடுத்த மாதம் முதல் தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை கால சலுகையாக மிந்த்ரா, அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிட்டத்தட்ட 15% வரையுள்ள தள்ளுபடியை SBI வங்கி மூலம் கொடுக்கிறது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தள்ளுபடி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் இந்த குறிப்பிட்ட மாதங்களில் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். இந்த கால கட்டங்களை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் சில அதிரடி சலுகைகளும் கொடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக சில சலுகைகளை அறிவித்து வருகிறது.

EPFO பயனர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வீட்டுக்கடன், குழந்தைகள் கல்விக்கு உதவித்தொகை!

அதாவது பண்டிகை குறித்து மக்களுக்கு நினைப்பூட்டும் விதமாக மிந்த்ரா, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இ-பரிசு வவுச்சர்களுக்கு புதிய தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் SBI கார்டு பயனர்கள் இ-கிஃப்ட் வவுச்சர்களில் 15 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும். மேலும், இந்த சலுகை செப்டம்பர் 27 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று!

இது தொடர்பாக SBI கார்டு சேவை, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘பண்டிகை கால மகிழ்ச்சியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் சிறந்த பிராண்டுகளுக்கான இ-வவுச்சரை அவர்களுக்கு பரிசாக வழங்குங்கள். மிந்த்ரா, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பல பிராண்டுகளில் இ-கிஃப்ட் வவுச்சர்களுக்கு 15% வரை தள்ளுபடி கிடைக்கிறது’ என்று பதிவிட்டுள்ளது. அந்த வகையில் SBI வழங்கும் கூடுதல் சலுகை விவரங்கள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அமேசான் பே பரிசு அட்டை வவுச்சர்களில் 3 சதவீதம் தள்ளுபடி.
  • Flipkart வவுச்சர்களில் 20 சதவீதம் தள்ளுபடி.
  • மிந்த்ரா வவுச்சர்களுக்கு 9 சதவீதம் தள்ளுபடி.
  • ஸ்பென்சர்ஸ் வவுச்சர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி.
  • பிக் பஜார் வவுச்சர்களுக்கு 6 சதவீதம் தள்ளுபடி.
  • க்ரோஃபர்ஸ் வவுச்சர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி.
  • ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெயில் லிமிடெட் வவுச்சர்கள் – ஆலன் சோலி, லூயிஸ் பிலிப் போன்ற பிராண்டுகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி.
  • பாண்டலூன்ஸ் வவுச்சர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி.
  • பிரஸ்டீஜ் வவுச்சர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!