மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) 4% அதிகரிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) 4% அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) 4% அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) 4% அதிகரிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி தொகை 3 முதல் 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும்.

சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு (DA) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% அகவிலைப்படி தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது. இப்போது அடுத்து வரும் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி (DA) தொகை அதிகரிக்கப்படும் என ஊடக அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது. இப்போது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது சில்லறை பணவீக்கமும் மிக அதிகமாக இருப்பதால் DA உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!

அந்த வகையில் இந்த முறை DA தொகை 38% ஆக உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வெளியான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்தில் 4% டிஏ உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் AICPI குறியீடு சரிவைக் கண்டது. அந்த வகையில் ஜனவரியில் 125.1 ஆக இருந்த AICPI எண்ணிக்கை பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 1 புள்ளி உயர்ந்து 126 ஆகவும் அதிகரித்தது.

Exams Daily Mobile App Download

ஆனால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இந்த குறியீட்டு எண் 126க்கு மேல் ஏறினால், அரசாங்கத்தால் 4% DA உயர்வை வழங்க முடியும். இந்த உயர்வு தற்போதைய 34 சதவீதத்தில் இருந்து டிஏ எண்ணிக்கையை 38 சதவீதமாக உயர்த்தும். அதே வேளையில் இது மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச அடிப்படை சம்பளம்:

  • மாத அடிப்படை சம்பளம் – ரூ 56,900
  • தற்போதுள்ள DA (34%) – ரூ 19,346
  • திருத்தப்பட்ட பிறகு DA (38%) – ரூ. 21,622
  • DA இல் மாதாந்திர அதிகரிப்பு – ரூ 2,276
  • ஆண்டு அதிகரிப்பு (மாதாந்திர அதிகரிப்பு x 12) – ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்:

  • மாத அடிப்படை சம்பளம் – ரூ 18,000
  • தற்போதுள்ள DA (34%) – ரூ 6,120
  • திருத்தப்பட்ட பிறகு DA (38%) – ரூ: 6840
  • டிஏவில் மாதாந்திர அதிகரிப்பு – ரூ 720
  • ஆண்டு உயர்வு – ரூ.8,640

கணக்கீடு:

மத்திய அரசு 2006ல் டிஏவை கணக்கிடுவதற்கான ஃபார்முலாவை மாற்றியது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏவை கணக்கிடும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு:

  • அகவிலைப்படி % = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76)*100.

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு:

  • அகவிலைப்படி % = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33)*100.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!