Amazon, Google & Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பள உயர்வு!

0
Amazon, Google & Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - சம்பள உயர்வு!
Amazon, Google & Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - சம்பள உயர்வு!
Amazon, Google & Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பள உயர்வு!

நடப்பு நிதியாண்டில் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

கொரோனா பேரலைத்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு உலக நாடுகளில் இப்போது தொழில்துறை நிறுவனங்கள் மீண்டுமாக எழுச்சி கண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நிறுவனங்களில் சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதய சூழலில் மக்கள் புதிய இயல்புக்கு பழக்கப்பட்டதால் வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதாவது, நிறுவனங்கள் அதன் சிறந்த திறமைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், திறமைகளை ஈர்க்கவும் ஊழியர்களுக்கு வெகுமதிகளை அளித்து வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!

இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டில், அக்சென்ச்சர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி MNC நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி, அவர்களுக்கு பதவி உயர்வு அளித்தன. இதை தொடர்ந்து அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளமான 160,000 டாலர் முதல் 350,000 டாலர் வரை இரட்டிப்பாக்குவதாக அறிவித்தது.

மேலும், உலகளவில் பெரும்பாலான வேலைகளுக்கான ஒட்டுமொத்த இழப்பீடு வரம்புகளை அதிகரித்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கூகுள் நிறுவனம் தனது உயர் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. அந்த வகையில் ஜனவரியில், கூகுள் நிறுவனம் தனது உயர் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொழிலாளர்களுக்கானது அல்ல. இது குறித்த அறிக்கைகளின்படி, கூகுள் தனது நான்கு மூத்த நிர்வாகிகளின் அடிப்படை சம்பளத்தை 650,000 டாலரில் இருந்து 1 டால்ர் மில்லியனாக உயர்த்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் உலகளாவிய தகுதி பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியது. இது குறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் உலகளாவிய தகுதி வரவு செலவுத் திட்டத்தை ஏறக்குறைய இரு மடங்காக உயர்த்தியுள்ளது என்றும் அது அவர்களின் தொழில் வாழ்க்கையின் நடுவில் உள்ளவர்களுக்கு அதிக ஊதியத்தை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் வழக்கமான ஊதிய பட்ஜெட்டை விட அதிகமாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!