தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் – தொடரும் பேச்சுவார்த்தை!

0
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் - தொடரும் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் - தொடரும் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியம் – தொடரும் பேச்சுவார்த்தை!

தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமுக உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இன்று தொடர்வதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேச்சுவார்த்தை:

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 3 ஆண்டுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், 2019 ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. மேலும் 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு, சட்டசபை தேர்தல், அமைச்சர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்த பேச்சு முழுவீச்சில் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நேற்று (23.08.22) நடந்தது.

இந்த கூட்டத்தில், நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை தொடர்ந்து நடந்தது. பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) 11 மணிக்கு மீண்டும் நடக்கும் என்று அறிவித்தனர். மேலும் சி.ஐ.டி.யு. சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், எஸ்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிய போது, போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 7-வது முறையாக நடைபெற்றது. மேலும் சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட 66 சங்க நிர்வாகிகளும் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்தபடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – நாளை உடல்தகுதி தேர்வு!

Exams Daily Mobile App Download

அகவிலைப்படி உயர்வு குறிப்பாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை மாற்றி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களின் 81 மாதம் அகவிலைப்படி உயர்வை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் பிரதானமாக வைத்து நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தோம். ஆனால் இது தொடர்பாக எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால் எங்களுடைய கோரிக்கை தற்போது உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து நாளை (இன்று) நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அதிலும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கையை முதல்வரிடம் கலந்து பேசி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என அவர்கள் கூறினர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!