TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – நாளை உடல்தகுதி தேர்வு!

0
TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - நாளை உடல்தகுதி தேர்வு!
TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - நாளை உடல்தகுதி தேர்வு!
TNUSRB SI தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – நாளை உடல்தகுதி தேர்வு!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூன் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல் உடல் தகுதித்தேர்வு நடைபெற்று வருகிறது.

உடல்தகுதி தேர்வு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூன் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி அன்று அறிவித்தப்படி நடைபெற்றது. அத்துடன் இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக TNUSRBயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட சான்றிதழ் மற்றும் உடல்தகுதி தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை மூலமாக 4.78 லட்சம் வரை கடன்? செய்தியின் உண்மை நிலவரம் என்ன!

இந்த உடல்தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மைதானத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் அழைப்பாணை, அனைத்து அசல் சான்றிதழ்கள், அசல் சான்றிதழ்களின் 2 நகல்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அசல் உண்மைச் சான்றிதழ், கூடுதல் சான்றிதழ்கள் வைத்திருந்தால் அதனின் அசல் மற்றும் 2 நகல்களையும் கொண்டு வர வேண்டும். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

இதில் முதற்கட்டமாக இன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பு அளவு அளத்தல், 1500 மீ. ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும் என்றும் நாளை 2ம் கட்டமாக அழைப்பாணை சரிபார்ப்பு, கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் (அல்லது) நீளம் தாண்டுதல், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் செல்போன் கட்டாயமாக கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!