10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – தகுதி, வயது, சம்பளம் & முழு விவரம் இதோ!

0
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - தகுதி, வயது, சம்பளம் & முழு விவரம் இதோ!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - தகுதி, வயது, சம்பளம் & முழு விவரம் இதோ!
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – தகுதி, வயது, சம்பளம் & முழு விவரம் இதோ!

அரசு வேலை வேண்டும் என ஆசைப்படுவர்களுக்கு இந்திய தபால் துறையில் கிராம தபால் ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு, தகுதி, வயது, சம்பளம் குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தபால் துறை வேலைவாய்ப்பு:

இந்திய தபால் துறை ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இந்திய தபால் துறையில் தேர்வே இல்லாமல் கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு வேலை வேண்டும் என எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டுமா? சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள்!

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை எப்படி அனுப்பலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிராம தபால் சேவை

நாடு முழுவதும் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

கிராம தபால் ஊழியர் (BPM) பணிக்கு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும்.

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணிக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல், 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2022

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவுக்கு ரூ. 100 வசூலிக்கப்படும், SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in என்பதில் நுழைய வேண்டும்.
  • பின்னர் எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • இணையதளத்தின் மேலே பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் போன்ற சில இணைப்புகள் இருக்கும்.
  • விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக விண்ணப்பிப்பவராக இருந்தால், பதிவு படிவத்தில் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஒருமுறை பதிவு கட்டாயம். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதிவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பதிவை முடித்த பிறகு, பதிவு எண்ணைக் குறித்து வைத்து, மேலும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அவர்களின் பதிவு எண் அல்லது கட்டண ஐடியை மறந்து விட்டால் அல்லது அவர்களின் மொபைல் எண்ணை மாற்ற அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆக பதிவு செய்ய இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அதன் மூலம் விவரங்களை மீட்டெடுக்கலாம்.

  • பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்து, பின்னர் பதிவு எண்ணை உள்ளிட்டு அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்போது முழுமையான விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும்.
  • அதில் முகவரி, கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்ற சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றி இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக மிக முக்கியமாக, நீங்கள் வேலை பார்க்க விரும்பும் கிராம அஞ்சல் அலுவலகங்களின் முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களுக்கு மட்டுமே நீங்கள் போட்டியிட முடியும்.
  • இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை அடுத்தடுத்த தேவைகளுக்கு பயன்படுத்த அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!