450 வழித்தடங்களில் கிராமப்புற போக்குவரத்து – மாநில அரசின் திட்டம்!

0

வரவுள்ள தேர்தலுக்கு முன்னதாக மாநில அரசு பல்வேறு திட்டங்களையும் மக்களின் நலங்கிற்காக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற போக்குவரத்து:

ஜார்கண்ட் மாநிலத்தில் நடப்பாண்டில் பொதுத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிராமபுற சாலைகளுக்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்வர் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளார். இத்திட்டங்களின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் இணைப்பை மேம்படுத்துவதும், அவற்றை தொகுதி துணை பிரிவு மற்றும் மாவட்ட தலைமையகம் போன்ற முக்கிய நகரங்களுடன் தினசரி பயணத்திற்கான போக்குவரத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல பஸ்கள், டெம்போ ட்ராவலர்கள் இத்திட்டத்திற்காக மானிய விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றில் பணியாற்றுவதற்கு 47 பேர் தற்போது வரை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கு மானியமாக ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூபாய் 18 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், பெண்கள் இவர்களுக்கு இலவச பயணம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – முதல்வரின் சூப்பர் திட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!