கொரோனா வைரசால் கிளம்பிய வதந்திகள்..!

0
கொரோனா வைரசால் கிளம்பிய வதந்திகள்..!
கொரோனா வைரசால் கிளம்பிய வதந்திகள்..!

கொரோனா வைரசால் கிளம்பிய வதந்திகள்..!

COVID-19 கொரோனா வைரஸ் பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது. அரசாங்கமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய விஷயங்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மொபைல் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் பரப்பி வருகின்றனர். ஆனால் என்றைக்கும் உண்மைக்கு மத்தியில் ஏராளமான கட்டுக்கதைகளும் பொய்களும் சேர்ந்துதான் கிளம்புகிறது. இந்த கட்டுக்கதைகளால் மக்கள் தவறான விழிப்புணர்வையும் பெற்று வருகிறார்கள் என்பது தான் வருத்தக்கூடிய விஷயம். மக்களிடையே சரியான விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது தகவல் தொடர்பின் பணியாக இருக்க வேண்டும். ஆனால் என்னவோ இங்கே அது சரியாக நடப்பதில்லை. நீங்கள் நினைக்கலாம் இந்த கட்டுக்கதைகளால் பெரிதாக என்ன ஆகி விட முடியும் என்று கூறலாம். ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்றால் என்னவாகும். அவர்கள் விழிப்புணர்வோடு இருக்க மாட்டார்கள். சுகாதார முறையை கடைபிடிக்க மாட்டார்கள். தனிமையில் இருக்க மாட்டார்கள். இது சரியா? கண்டிப்பாக கிடையாது. அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது தெரியாமல் இருந்தால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடும். வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று பரவக் கூடும். எனவே கொரனோ பற்றிய எந்தவொரு சிறிய தகவலாக இருந்தாலும் அது பெரிது. ஒரு உயிரை காப்பாற்ற நீங்கள் செய்யக் கூடிய விழிப்புணர்வு செயல். எனவே வேண்டாத கட்டுக் கதைகளையும் வதந்திகளையும் முதலில் பரப்பி விடாதீர்கள். அதே மாதிரி அப்படி பரப்பி விட்ட கட்டுக்கதைகள் எவை என்பதையும் தெரிந்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதோ கொரோனா பற்றி தவறாக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் இத. கொரோனா வைரஸ் ஏறுபடுத்தும் வதந்திகளை கட்டுபாட்டுத்த நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

எது உண்மை..?

மக்கள் அனைவரும் ஒரு விஷத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த புதிய கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோயாகும். இதற்கு வயது வித்தியாசமெல்லாம் ஏதும் கிடையாது. யாரை வேண்டுமானாலும் தாக்க கூடியது. இளைஞர்களும் இதற்கு பலிகடா தான். ஒரு இளைஞனை இந்த தொற்று நோய் தொற்றும் போதும் அது மற்ற வயதானவர்களையும், குட்டிக் குழந்தைகளையும், தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதார முறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம். இதில் நான் இளைஞன் வயதானவர் என்றெல்லாம் கிடையாது. பாதிக்கப்பட்ட நபர் யாராக இருந்தாலும் தனியாக இருப்பது உங்களைச் சுற்றியுள்ளவர்வர்களையும் மற்ற குடும்பத்தாரை பாதிக்காமல் இருக்கும் என்பதை மறவாதீர்கள். தயவு செய்து வீண் வதந்திகளை நம்பி தவறான விழிப்புணர்வு பெற வேண்டாம். அனைவரும் உலக சுகாதார மையம் கூறுகின்ற வழிகளில் சுகாதார நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றுங்கள்.

கொரோனாவை தடுக்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்

யார் யார் மாஸ்க் போடவேண்டும்..?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ வசதிகள் செய்யும் மருத்துவர்கள், கொரோனா அறிகுறிகளான அதாவது இருமல், தும்மல் இருக்கும் நபர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நம் மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டு அனைவரும் மாஸ்க் அணிய முற்பட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பில்லாத ஒருவர் மாஸ்க் அணிவது ஒரு மாஸ்க்கை நீங்கள் வீணடிப்பதற்கு அர்த்தம். இருமல், தும்மல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பாமல் இருக்கவே மாஸ்க் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் தவறான புரிதலால் இன்று உலகமெங்கும் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாஸ்க் அணிவதை விட, COVID-19 பரவுவதைத் தடுப்பதில் நீங்கள் உங்கள் பங்கை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் உலக சுகாதார நிறுவனம் கூறிய தடுப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை எல்லாரும் பின்பற்றுங்கள். அடிக்கடி கைகளை மட்டும் சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!