தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு - அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு - அமைச்சர் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தின் இத்துறை ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு – அமைச்சர் ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதனால் 24,805 தொகுப்பூதிய பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

சம்பள உயர்வு அறிவிப்பு:

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதமானது நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சியில் 1000 கடைகள் மூடியதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது புதிய கடைகள் திறக்கப்படுவதாகவும், பாரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எங்கும் பூரண மதுவிலக்கு குறித்து தெரிவிக்கவில்லையென்றும், தமிழ்நாட்டில் 5,350 டாஸ்மாக் இருப்பதாகவும், புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை என்று கூறினார்.

Exams Daily Mobile App Download

மேலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்படும் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 வருடங்களில் கேங்மேன் பணியிடங்கள் நிரப்ப படவில்லை என்றும், இதனால் 5000 காலியிடங்கள் உள்ளன, இந்த இடங்களை நிரப்புவதற்கு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நல்ல தீர்வு விரைவில் எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள்:

1. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவுவதற்காக ரூபாய் 5 கோடி மானியமாக வழங்குதல்.

2. மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுதல்.

3. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அலுவலகத்தில் மேம்படுத்திக் நவீனமயமாக்கல் ரூபாய் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் – அமைச்சரின் முக்கிய தகவல்!

4.மதுவிலக்கு குற்றவாளிகளின் இரவு நேர சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு 20 சோதனைச் சாவடிகளில் மின்கலத்துடன் கூடிய சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவிகளை ரூபாய் 0.13 கோடி நிதியில் பொருத்தப்படும்.

5.தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய் 16.67 கோடி செலவில் வழங்கப்படும்.

6. போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ரூபாய் ஒரு கோடி நிதி செலவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!