ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் – ரோஜா சீரியல் டிவிஸ்ட்!

0
ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் - ரோஜா சீரியல் டிவிஸ்ட்!
ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் - ரோஜா சீரியல் டிவிஸ்ட்!
ரோஜாவை கொலை செய்ய துணிந்த அனு, அதிர்ச்சியில் செண்பகம் – ரோஜா சீரியல் டிவிஸ்ட்!

சன் டிவியின் ரேட்டிங்கில் எப்போதுமே முன்னணியில் இருந்து வரும் ரோஜா சீரியலில் தற்போது மிகவும் பெரிய அளவிலான அதிரடி திருப்பங்கள் நடக்க உள்ளது. ரோஜாவை அனு கொலை செய்ய துணிந்து விடுகிறார்.

DNA டெஸ்ட்:

தனது பேத்தியை தான் பேரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அன்னபூரணி பாட்டி, பேரன் அர்ஜுன் ரோஜா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து விடுகிறார். இதனால் அன்னபூரணி பாட்டி மற்றும் அவரது பேத்தி அனு இருவரும் இவர்களுக்கு அடிக்கடி தொல்லைகளை கொடுத்து வருவார்கள். ஆனால் அனைத்து தொல்லைகளையும் ரோஜா கணவர் அர்ஜுனின் துணையுடன் சமாளித்து வருவார். ஒரு கட்டத்தில் ரோஜா தான் அன்னபூரணியின் பேத்தி என்ற உண்மை தெரிய வருகிறது.

ஊரடங்கு அமல்படுத்தினாலும் “வலிமை” வெளியாகும் – போனி கபூர் உறுதி! ரசிகர்கள் உற்சாகம்!

இதனை அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் நிரூபிக்க போராடி வரும் நிலையில், பாட்டி அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்நிலையில், ரோஜாவின் அம்மா செண்பகம் பல வருடங்கள் குடும்பத்துடன் சேராமல் தனியாக இருந்து வருவார். ஒரு கட்டத்தில் அவரை கண்டுபிடித்து விடுவார்கள். இதனால் செண்பகம் தனது மகள் யார் என்பதை சொல்லுவாரா என்று பல எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்த நிலையில், DNA டெஸ்ட் மூலம் யார் உண்மையான மகள் என்பதை நிரூபிக்கலாம் என்று திட்டமிடப்பட்டது.

பாரதியை குழப்பிய சாமியார், உண்மையை உணருவாரா? ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

இது தொடர்பான காட்சிகள் சீரியலில் வர உள்ள நிலையில், இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், வீட்டில் இருந்து டெஸ்ட்க்கு செல்வதற்கு முன்னதாக அனைவரும் சாமி கும்பிட்டு கிளம்புகின்றனர். அப்போது செண்பகம் மற்றும் ரோஜா இருவரும் ஒரே காரில் கிளம்புகின்றனர். ஆனால் வழியில் அனு காரை வழிமறித்து வருகிறார். அப்போது துப்பாக்கியுடன் ரோஜாவை நோக்கி அனு வருகிறார். இதனால் ரோஜா மற்றும் செண்பகம் இருவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!