தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? ஜூலை 6ல் முதல்வர் முக்கிய ஆலோசனை!
தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 6ம் தேதி அன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தெலுங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் சேவை முதல் வங்கி விதிமுறைகள் வரை – ஜூலை முதல் வரப்போகும் மாற்றங்கள்!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சம் குறைந்து வருவதால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
TN Job “FB
Group” Join Now
இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூலை 6ம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஜூலை 6ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Not have for covid-19
Covid-19