தமிழக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!

0
தமிழக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் - அரசாணை வெளியீடு!
தமிழக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் - அரசாணை வெளியீடு!
தமிழக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மீன்பிடி காலத்தையொட்டி வியாபாரம் இல்லாமல் தவித்து வரும் மீனவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் நிவாரணம் வழங்க இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு சில மாதங்கள் மட்டும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மீன்பிடிக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மீன்வளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து இந்த சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மீன் பிடி தடைக்காலத்தினால் மீனவர்கள் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்திய கடற்படையில் 100 அக்னிவீர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்!

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி 14 கடலோர மாவட்டத்தை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க இருப்பதாக தமிழக அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 1.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹5000 வீதம் தற்போது மீனவ குடும்பங்களுக்காக ரூபாய் 89.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!