Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் – பயனர்கள் வரவேற்பு!

0
Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் - பயனர்கள் வரவேற்பு!
Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் - பயனர்கள் வரவேற்பு!
Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் – பயனர்கள் வரவேற்பு!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ஜியோ. தற்போது பிராட்பேண்ட் ஃபைபரின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ஜியோ தனது பிராட்பேண்ட் ஜியோ ஃபைபரின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,097 முதல் ரூ.25,597 வரையிலான திட்டங்கள்வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை பெறுவதற்கு Installation Charge வசூலிக்கப்பட்டது. இந்த திட்டங்களில் 1Gbps வரை நெட்வொர்க் வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜியோவின் இணையதளம் மற்றும் மைஜியோ செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.2,097 திட்டமானது மூன்று மாதங்களுக்கு அன்லிமிட்டட் டேட்டாக்களுடன் 100Mbps வேகத்தையும், அன்லிமிடெட் காலிங் வசதியையும் வழங்குகிறது. இதில் OTT சேவைகள் வழங்கப்படாது.

கடைகளின் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்!

அதனை தொடர்ந்து ரூ.2,997 க்கான திட்டத்தில் 14 OTT தளங்கள் வழங்கப்படுகிறது. AltBalaji, Amazon Prime Video, Discovery +, Disney+ + Hotstar to Eros Now மற்றும் Zee5 முதலியன இதில் அடங்கும். இந்த திட்டமானது 150Mbps வேகத்துடன் இயங்கும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியும் உள்ளது. ரூ .4,497 திட்டத்தில் பல OTT தளங்கள், நெட்ஃபிக்ஸ் அதனுடன் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் 300 Mbps வேகத்தில் நெட்வொர்க் வசதியும் உள்ளது. அதனை தொடர்ந்து ரூ.7,497திட்டத்தில் 500 Mbps வேகத்தில் நெட்வொர்க் வசதியும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து ரூ.11,997 திட்டத்தில் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் நெட்வொர்க் வசதியும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் Alt Balaji, Netflix, Amazon Prime Video, Discovery +, Disney+ + Hotstar to Eros Now மற்றும் Zee5 ஆகியவை உடன் வழங்கப்படுகிறது. இறுதியாக ரூ.25,497 திட்டத்தில் 6,600 ஜிபி டேட்டா 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 15 OTT செயலிகளை பயன்படுத்தலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!