Surf Excel, Rin, Lifebuoy விலை திடீரென அதிகரிப்பு – புதிய பட்டியல் இதோ!
மக்களின் அன்றாட தேவைகளில் முக்கிய இடத்தை வகித்திருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்புகளான சர்ப் எக்செல், ரின், லைப்பாய் போன்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பொருட்களின் புதிய விலைப்பட்டியல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்து.
விலை அதிகரிப்பு
இந்த காலகட்டத்தில் வீட்டுக்கு தேவையான அன்றாட பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து தற்போது அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சலவை பொருட்களான சர்ப் எக்செல், ரின், லக்ஸ் உள்ளிட்ட இதர பொருட்களும் திடீரென விலை உயர்வை கண்டுள்ளது. இந்த பொருட்கள், அவசியம் என்பதால் திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் – பயனர்கள் வரவேற்பு!
அதாவது நுகர்வோர் பொருட்களின் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), சலவை மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன் கீழ், HUL கடந்த மாதத்தில் சோப் பார்களின் விலையை 3.5 முதல் 14 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோகிராம் மற்றும் 500 கிராம் சோப்களின் விலை கணிசமான உயர்வை கண்டுள்ளது. அதன் படி 500 கிராம் சோப்களின் விலை இப்போது ரூ.29 ஆக இருக்கும்.
கடைகளின் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்!
அதே போல ஒரு கிலோ எடையுள்ள பொருட்களின் விலை ரூ .55 முதல் ரூ.57 வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒரு கிலோ பாக்கெட் ரின் சோப்பு பௌடர் ரூ.82 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இதுவரை ரூ.77 என இருந்தது. மேலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம், சிறிய பேக்குகளுக்கான எடையையும் குறைத்துள்ளது. உதாரணமாக, ரூ.10க்கான ரின் சோப்பின் அளவு இதுவரை 150 கிராம் எடையைக் கொண்டிருந்தது. இப்போது அவை 130 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது
Reliance Jio Fiber புதிய ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் – பயனர்கள் வரவேற்பு!
மேலும் சர்ப் எக்செல் போன்ற சலவை பொருட்களின் ஒரு கிலோ பாக்கெட் விலை ரூ.14 அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் லக்ஸ் மற்றும் லைப்பாய் போன்ற சோப் பார்களிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமாக காம்போ பேக்குகளின் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் 100 கிராம் எடையுள்ள 5 லக்ஸ் பேக்கின் விலை ரூ.128 முதல் 130 ஆக அதிகரித்துள்ளது. இந்த பொருட்கள் ரூ.10 வரை விலை உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.