IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!

0
IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!
IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!
IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். பயணிகளுக்கு ஏற்றார் போல் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

டிக்கெட் கேன்சலேஷன்:

நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரயில் பயணங்களையே விரும்புகின்றனர். ஏனெனில் ரயில் டிக்கெட் குறைவு என்பதனாலும், உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதனாலும் மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். அதனை தொடர்ந்து ரயில்வே துறையும் பயணிகளுக்கு ஏற்றார் போல் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ரயில்வே துறைக்கு என்று பிரத்தியேக மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியில் நிறைய பணத்தை டெபாசிட் செய்பவர்கள் கவனத்திற்கு – ஆபத்தா? நல்லதா?

அந்த மொபைல் செயலியின் மூலம் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் கேன்சலேஷன் மற்றும் இரயில் நேரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை இந்த செயலியின் மூலம் பயணிகள் மேற்கொள்ள முடியும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போகலாம். அந்த நிலையில் நமது டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியும். எப்படி கேன்சல் செய்வது என்பது பற்றியும், கேன்சல் செய்வது மூலம் பணம் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் என்றும் தொடர்ந்து பார்க்கலாம்.

டிக்கெட் கேன்சல் செய்யும் நேரத்தை பொறுத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதன்படி ரயில் புறப்படும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட் கேன்சல் செய்தால் AC 1st CLASS – ரூ.240, AC 2nd CLASS – ரூ.200, AC 3rd CLASS – ரூ.180, SLEEPER CLASS – ரூ.120, 2nd CLASS – ரூ.60 ஆகும். இரயில் புறப்படுவதற்கு 12 முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால் 25% பிடித்தம் செய்யப்படும். 12 முதல் 4 மணி நேரத்திற்கு முன்னர் கேன்சல் செய்தால் 50% பணம் மற்றும் GST சேர்த்து பிடித்தம் செய்யப்படும்.
பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது.

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் முறை:
  • நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தால் முதலில் IRCTC – யின் https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் Username மற்றும் password பதிவிட வேண்டும்.
  • அதில் My Transactions கிளிக் செய்து Ticket history பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் Cancellation என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • டிக்கெட் Cancellation – ஐ உறுதிப்படுத்த மீண்டும் Cancel confirm ticket ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் கேன்சல் செய்த நேரத்தின் அடிப்படையில் டிக்கெட் கட்டண தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு ஓரிரு நாளில் வந்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!