Jio, Airtel, Vodafone பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ரூ.500க்கும் கீழான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

0
Jio, Airtel, Vodafone பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - ரூ.500க்கும் கீழான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Jio, Airtel, Vodafone பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் - ரூ.500க்கும் கீழான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Jio, Airtel, Vodafone பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ரூ.500க்கும் கீழான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் ரூ.500 க்கும் கீழ் இருக்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்:

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ரூ.500க்கும் கீழுள்ள சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.500க்கும் கீழுள்ள ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம். முதலில் 28 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை (ஆக. 24) எந்தெந்த ஏரியாக்களில் Power Cut – முழு விவரம் இதோ!

அதே போல 30 நாட்கள் வரைக்கும் செல்லுபடியாகும்படியாகும் ரூ.259க்கு திட்டம் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, 28 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS ஆகிய வசதி வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3GB டேட்டாவுடன் ரூ.419 ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, 56 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS ஆகிய வசதி வழங்கப்படுகிறது.

அடுத்ததாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பார்க்கலாம். 18 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது. அடுத்ததாக 21 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.209 திட்டத்தில் 1GB டேட்டா, 100SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. அதே போல 21 நாள் செல்லுபடியாகும் ரூ.249 திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவும் அதே சலுகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்கப்படுமா? மக்களிடம் கருத்து கேட்புக்கு மத்தியில் அமைச்சர் பேட்டி!

மேலும், 31 நாள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் இலவச டேட்டா, 100SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.409 வோடபோன் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் இலவச டேட்டா, 100SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

தற்போது ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பார்க்கலாம். 21 நாள் செல்லுபடியாகும் ரூ.209 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா, 100SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்களுக்கு ரூ.265 ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ.359 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் ஒரு நாளைக்கு 2GB டேட்டா வழங்கப்படுகிறது.

அடுத்ததாக 56 நாட்களுக்கான ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 3 மாத இலவச அப்பல்லோ உறுப்பினர் மற்றும் ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரூ.499 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் ஒரு நாளைக்கு 100SMS மற்றும் தினமும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஓராண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வசதி, ரூ.100 கேஷ்பேக் மற்றும் மூன்று மாத அப்பல்லோ மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!