Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்கள் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 399 விலையுள்ள புதிய திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோ பயனர்கள் தேவைப்படும் ஒரு முக்கிய தொகுப்பை கீழே காண்போம்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தில் விலையை சென்ற வருடம் இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்த திட்டங்கள் பயனர்களுக்கு பல வசதிகளுடன் OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகின்றன. Netflix சந்தாவுடன் வரும் இந்தத் திட்டங்களின் விலை ரூ.1000க்கும் குறைவாகவே இருக்கும். Netflix, Disney+ Hotstar, Amazon Prime வீடியோவிற்கான இலவச சந்தாக்களுடன் வரும் திட்டங்களை குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரின் கவனத்திற்கு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.399 விலையில் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 75GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் ஒரு மாத சந்தா கிடைக்கிறது. மேலும், அமேசான் பிரைம் வீடியோ ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 இலவச SMS ஆகியவையும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகலும் பயனர்களுக்கு கிடைக்கும்.

அடுத்தாக, ரூ.599 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 100 GB டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் ஒரு மாத சந்தா கிடைக்கிறது. 100GB டேட்டா ரோல் ஓவர் ஆஃபரும் இதில் உள்ளது. மேலும், அமேசான் பிரைம் வீடியோ ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருடன் இந்த திட்டத்தை பகிர்ந்து கொள்ள முடியும். இதில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 இலவச SMS ஆகியவையும் பயனர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!