TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள் திருப்புதல் – முக்கிய கேள்விகள்!!

0
TNPSC குரூப் 2 தேர்வு 2024 – Mains தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் தெரியுமா??
TNPSC பொதுத்தமிழ் வினாத்தாள் திருப்புதல் – முக்கிய கேள்விகள்!!

TNPSC தேர்வுகளில் பொதுத்தமிழ் பாடப்பிரிவு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட கேள்விகள் மதிப்பீடு செய்யப்படும். அதனால், தமிழ் மொழியில் உள்ள இலக்கண பகுப்புகள், இலக்கியங்கள் மற்றும் தொண்டு செய்தோரைப் பற்றிய குறிப்புகள் இவற்றை தவறாது படித்து விட வேண்டியது கட்டாயம். அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை உங்கள் திருப்புதலுக்காக கீழே வழங்கியுள்ளோம்.

1. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

(A) அகநானூறு

(B) ஐங்குறுநூறு

(C) நற்றிணை

(D) பரிபாடல்.

2. அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

(A) பரிபாடல்

(B) நற்றிணை

(C) ஐங்குறுநூறு

(D) பதிற்றுப்பத்து

3. செல்வச் செவிலி-இலக்கணக் குறிப்பு

(A) உவமை

(B) அடுக்குத்தொடர்

(C) என்னும்மை

(D) உருவகம்

4. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்

(A) உம்மைத்தொகை

(B) பெண்பால் பெயர்கள்

(C) என்னும்மை

(D) அன்மொழித்தொகை

5. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

(A) மிகும்

(B) மிகாது

(C) சில இடங்களில் வரும்

(D) சில இடங்களில் வராது

6. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?

(A) பழுத்த பழம்

(B) பழுக்கும் பழம்

(C) பழுக்கின்றது

(D) பழங்கள் பழுத்தன

7. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?

(A) படித்து

(B) படித்தல்

(C) படித்த

(D) பாடுதல்

8. கல் என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?

(A) கற்றல்

(B) கற்பனை

(C) கண்டான்

(D) கல்லை

விடைகள்:

1-C, 2-A, 3-D, 4-C, 5-A, 6-C, 7-A, 8-A

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!