RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RBI வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10/05/2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RBI
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/05/2024
விண்ணப்பிக்கும் முறை Offline

RBI காலிப்பணியிடங்கள்:

மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant (MC) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

MC வயது வரம்பு:

விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு – தேர்தல் ஆணையம் அதிரடி!

Medical Consultant ஊதியம்:

ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்படும்.

RBI வங்கி தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10/05/2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024

Download Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!