பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 2 மாதம் கோடை விடுமுறை!

0
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 2 மாதம் கோடை விடுமுறை!

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ள நிலையில் 2 மாதங்கள் கோடை விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வானது திங்கட்கிழமை நடந்து முடிந்தது. 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ம் தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 ம் தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பின் 9ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும்.

RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு 2 மாதங்கள் கோடை விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!