RBI Assistant 2023: கல்வி தகுதி, விண்ணப்பம், பிற முக்கிய விவரங்கள் உள்ளே!

0
RBI Assistant 2023: கல்வி தகுதி, விண்ணப்பம், பிற முக்கிய விவரங்கள் உள்ளே!
RBI Assistant 2023: கல்வி தகுதி, விண்ணப்பம், பிற முக்கிய விவரங்கள் உள்ளே!
RBI Assistant 2023: கல்வி தகுதி, விண்ணப்பம், பிற முக்கிய விவரங்கள் உள்ளே!

இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில், அந்த வேலைவாய்ப்பின் தகுதி மற்றும் பிற முக்கிய விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

RBI உதவியாளர் 2023:

மத்திய அரசின் துறைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த பதவிக்கான விண்ணப்பதிவுகள் தொடங்கும்.

Follow our Instagram for more Latest Updates

இப்பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், மேலும் அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயதில் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிப்ரவரி 1, 2022 க்குள் முடித்திருக்க வேண்டும். இதனுடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசு கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் – இன்று(டிச. 15) முதல் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download

முதல்நிலை, முதன்மை மற்றும் மொழித் தேர்வு என்று மூன்று படிநிலைகளில் உதவியாளர் பணிக்கான நியமனம் நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வு ஆங்கில மொழி, எண் திறன் மற்றும் பகுத்தறிவு திறன் போன்ற கேள்விகளை கொண்டிருக்கும். முதன்மைத் தேர்வு பகுத்தறிவு, ஆங்கில மொழி தேர்வு, எண் திறன் சோதனை, பொது விழிப்புணர்வு, கணினி அறிவு போன்றவற்றை பற்றிய கேள்விகளுடன் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!