Grid India வேலைவாய்ப்பு 2022 – B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Grid India வேலைவாய்ப்பு 2022 - B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Grid India வேலைவாய்ப்பு 2022 - B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Grid India வேலைவாய்ப்பு 2022 – B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Grid Controller of India Limited ல் ஏற்பட்டுள்ள Graduate Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை MHRD NATS ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 08.01.2023 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Grid Controller of India Limited
பணியின் பெயர் Graduate Apprentices
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Grid India காலிப்பணியிடங்கள்:

Grid India நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Apprentices பதவிக்கு என மொத்தம் 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Graduate Apprentices வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். SC/ST/OBC/PH பிரிவினருக்கு இந்திய அரசாங்க விதிமுறை படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Grid Controller of India Limited கல்வித் தகுதி:

Graduate Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech(Engg.)in Electrical Engineering பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஐடி-யில் பணிபுரிய விரும்புவர்களுக்கு.. சென்னை Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
Graduate Apprentices பயிற்சி காலம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி காலம் ஒரு வருடம் ஆகும். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒப்பந்தம் தானாகவே நிறுத்தப்படும்.

Grid India வேலைவாய்ப்பு ஊதிய விவரம் :

Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/-ஊதியமாக வழங்கப்படும்.

Grid Controller of India Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளம் மூலம் தங்களை பதிவு செய்ய வேண்டும்.மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக 08.01.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!