சஞ்சீவுடன் சண்டை போடும் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா – உனக்கு யார் முக்கியம்? வைரலாகும் வீடியோ!

0
சஞ்சீவுடன் சண்டை போடும் 'ராஜா ராணி 2' ஆலியா மானஸா - உனக்கு யார் முக்கியம்? வைரலாகும் வீடியோ!
சஞ்சீவுடன் சண்டை போடும் 'ராஜா ராணி 2' ஆலியா மானஸா - உனக்கு யார் முக்கியம்? வைரலாகும் வீடியோ!
சஞ்சீவுடன் சண்டை போடும் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா – உனக்கு யார் முக்கியம்? வைரலாகும் வீடியோ!

தற்போது 2வது குழந்தையின் 8 ஆவது மாத ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ள ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ஆலியா மானஸா இது தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

ஆலியா மானஸா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி 2’. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்த ‘ராஜா ராணி’ சீரியலின் 2ம் பாகமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் நடிகர் சித்து மற்றும் ஆலியா மானஸா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஆலியா மானஸா, இந்த சீரியலில் தன்னுடன் நடித்திருந்த நடிகர் சஞ்சீவை காதலித்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அபிஷேக்? அவரே அளித்த விளக்கம்!

இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் ஐலா என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்பிற்கு பின் விஐய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா தற்போது 2வது முறை கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொண்ட சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா தம்பதியினருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்தது. அந்த வகையில் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடி ரசிகர்களை கவரும் வண்ணம் பல்வேறு வகையான வீடியோக்களை எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மீண்டெழுந்த ‘பாம்புபிடி மன்னன்’ வாவா சுரேஷ் – மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்!

இதில் முக்கியமாக ஆலியா மானஸாவின் குழந்தை ஐலா ஒவ்வொரு வீடியோவிலும் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 8வது மாத ஸ்கேன் செய்வதற்காக ஆலியா மானஸா தன் கணவரின் குடும்பத்தாருடன் மருத்துவமனை சென்றுள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் மருத்துவமனை செல்லும் முன்பாக ஐலா பாப்பாவின் 8வது மாத ஸ்கேன் ரிப்போர்ட்டை ரசிகர்களிடம் காட்டிய ஆலியா மானஸா, இந்த பாப்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் இப்படி சேமித்து வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

தொடர்ந்து செல்லும் வழியில் ஐலாவுடன் சஞ்சீவ் விளையாட, மருத்துவமனையில் குழந்தை ஸ்கேன் பற்றிய சில விஷயங்களை ஆலியா மானஸா இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் ஆலியா மானஸா, மருத்துவமனைக்கு எதற்காக வந்திருக்கிறோம். என்னை விட்டு விட்டு ஐலாவை வீடியோ எடுக்கிறீர்கள் என்று சஞ்சீவை செல்லமாக கோபித்து கொள்ள அதற்கு ஐலா பாப்பாவிற்கு தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சஞ்சீவ் பதில் அளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!