மீண்டெழுந்த ‘பாம்புபிடி மன்னன்’ வாவா சுரேஷ் – மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்!
சமீபத்தில் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ‘வாவா சுரேஷ்’ இன்று (பிப்.7) டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
‘வாவா சுரேஷ்’
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் பாம்புப்பிடி வீரர் வாவா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாக பிடிப்பதில் வல்லவர் என்பதால் இவரை மக்கள் பாம்பு பிடி மன்னன் என்று அன்பாக அழைப்பது உண்டு. குறிப்பாக விஷத்தன்மை அதிகமுள்ள பாம்புகளை கூட இவர் எளிதாக பிடிக்க கூடியவர். இதனால் வாவா சுரேஷ் பல முறை பாம்பிடம் கடிபட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைவது வழக்கமானது. இவரது இந்த வீர தீர சாகசங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இப்படி இருக்க சமீபத்தில் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நாகப்பாம்பு நுழைந்து விட்டது. இதனை வாவா சுரேஷ் பிடிக்க முற்படும் போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரை தீண்டிவிட்டது. இதனால் விஷம் அவருடைய உடம்பில் பரவ அவர் கோமாவிற்கு சென்றார். உடனே அவருக்கு கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தினசரி இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
இந்நிலையில் பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வரும் வாவா சுரேஷின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்று (பிப்.7) கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது வாவா சுரேஷின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீட்டிற்குச் செல்லும் போது கவனமாகவும், தொற்றுநோய் அபாயம் இருப்பதால் பார்வையாளர்களை தவிர்க்கவும் மருத்துவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்