‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அபிஷேக்? அவரே அளித்த விளக்கம்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அபிஷேக்? அவரே அளித்த விளக்கம்!
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அபிஷேக்? அவரே அளித்த விளக்கம்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அபிஷேக்? அவரே அளித்த விளக்கம்!

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது, பிக் பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக செல்ல இருக்கும் நபர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பிக் பாஸ்’ அல்டிமேட்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் 18 அல்லது 19 போட்டியாளர்கள் ஒரு வீட்டிற்கு அனுப்பப்படுவரர்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பல டாஸ்குகள் வழங்கப்படும். அதில் உண்மையாக மற்றும் சரியாக யார் விளையாடுகிறார்களோ அவர்களே இறுதியில் வெற்றி வாகை சூடுவர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வித்தியாசமான முறையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சரக்குகளை காப்பாற்ற கஷ்டப்படும் கதிர், உண்மையை சொன்ன ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

முதன் முறையாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ஜூலி, பாலாஜி முருகதாஸ், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். 48 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அடுத்து வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய இருக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஓவியா, நடிகர் தர்ஷன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்பது போன்ற தகவல்கள் வைரலாகி வருகிறது.

அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே கடந்த பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட நடிகர் அபிஷேக்கிடம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் தான் வர இருப்பதாகவும், அவரை இந்த முறை சாக்கு மூட்டையில் கட்டி போட்டு விடுவார்கள் என்றும் அதனை வெண்ணிலா (வனிதா) வந்து அடித்து திறக்க போகிறார் என்று பதில் அளித்துள்ளார். அவர் பொய்யாக இதனை கூறினாரா? அல்லது உண்மையாக தான் கூறி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் குழப்பி போய் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here