விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக்கிங் ப்ரோமோ!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக 'செம்பருத்தி' ஷபானா - ஷாக்கிங் ப்ரோமோ!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக 'செம்பருத்தி' ஷபானா - ஷாக்கிங் ப்ரோமோ!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி சரவணணின் சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக்கிங் ப்ரோமோ!

விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் சந்தியா என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் நடிக்க இருப்பதாக வெளியான ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஷபானா

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் சீரியலை விட்டு விலகுவதும் புதிய நடிகர்கள் பலர் அறிமுகம் செய்யப்படுவதும் வழக்கமாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய், ஜீ தமிழ் போன்ற முன்னணி டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் இது போன்ற மாற்றங்கள் அதிகளவு நிகழ்ந்து வருகிறது. இது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த கண்மணி இந்த சீரியலை விட்டு விலக, இத்தொடரில் ஜீ தமிழ் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் இருந்து அருள்ஜோதி என்பவர் புதிய அஞ்சலியாக களமிறங்கி இருக்கிறார்.

ஜீ தமிழ் “கோகுலத்தில் சீதை” சீரியல் ஆஷா கவுடாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

அதே போல நடிகை கண்மணி ஜீ தமிழின் ‘அமுதாவும் ….ம்? என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்றிலும், விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை ரக்ஷிதா கலர்ஸ் தமிழில் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலிலும் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸாவுக்கு பதிலாக இத்தொடரில் புதிய சந்தியாவாக ஜீ தமிழ், ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் நடிக்க இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா தற்போது 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக பல பேச்சுக்கள் எழுந்து வந்தது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஆலியா மானஸா ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலக மாட்டேன் என்று விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், நிறை மாத கர்ப்பத்திலும் கூட இவர் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்க ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆலியா மானஸாவுக்கு பதிலாக ஷபானா நடிக்க இருப்பதாக வெளியான ப்ரோமோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!