ஜீ தமிழ் “கோகுலத்தில் சீதை” சீரியல் ஆஷா கவுடாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "கோகுலத்தில் சீதை" சீரியல் ஆஷா கவுடாவின் சினிமா பயணம் - ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் “கோகுலத்தில் சீதை” சீரியல் ஆஷா கவுடாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் TRPயில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்றாக ஜீ தமிழ் “கோகுலத்தில் சீதை” இருக்கிறது. இந்த சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆஷா கவுடா யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆஷா கவுடா:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வெற்றி சீரியலான “கோகுலத்தில் சீதை” சீரியலில் டான்ஸ் மாஸ்டர் நந்தா, ஆஷா கவுடா, நளினி, காயத்திரி, சங்கரேஷ் குமார், வசந்த் கோபிநாத், விஷ்ணுகாந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கோவக்காரனாக மட்டுமே காட்டப்படும் அர்ஜூனுக்கும் வசுந்தராவிற்கும் இடையே நடக்கும் காதல் கதையை தான் அடிப்படையாக கொண்டது. அர்ஜுனின் தொல்லைகளை தாக்கிக் கொண்ட வாழ்ந்து வரும் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆஷா கவுடா தனது நடிப்பு திறமையால் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

அவர் நடிப்பதற்கு முன்னதாக ஏரோபிக்ஸ் பயிற்சியாளராக இருந்த அவர் தனது பயணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் எங்கள் குடும்பத்தில் நிறைய ஜிம் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதனால், ஜிம் ட்ரெய்னராக வேண்டும் என்று நினைத்து, சிறிது காலம் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்தேன் என சொல்லி இருக்கிறார். அதன் பின் எனது இன்ஸ்டாகிராமைப் பார்த்து, எனக்கு ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. அது என்னை வசுந்திராவாக மாற்றியது என பதில் அளித்து இருக்கிறார்.

விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு – ரசிகர்கள் ஷாக்!

முதன்முறையாக நடிப்பு துறைக்கு வந்தாலும் வசுந்தரா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்ப்பு தன்னை நிகழ்ச்சி அடைய செய்ததாகவும்,, முன்பெல்லாம் எனக்கு மொழி பரிச்சயம் இல்லை. ஆனால் இப்போது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என பதில் அளித்து இருக்கிறார். பின் ஒரு நடிகையாக, நான் எனது தொழிலில் கச்சிதமாக இருக்க கடினமாக முயற்சி செய்கிறேன். என்னை பற்றி தவறாக பேசும் சக மனிதர்களை சமாளிக்க நான் போராடுகிறேன் என தத்துவம் ஒன்றையும் அவர் சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here