விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆலியாவுக்கு பதில் அறிமுகமாகும் புதிய நடிகை – ரசிகர்கள் குழப்பம்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் ஆலியாவுக்கு பதில் அறிமுகமாகும் புதிய நடிகை - ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் ஆலியாவுக்கு பதில் அறிமுகமாகும் புதிய நடிகை - ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஆலியாவுக்கு பதில் அறிமுகமாகும் புதிய நடிகை – ரசிகர்கள் குழப்பம்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. லட்சியம் நிறைந்த பெண் ஸ்வீட் கடை நடத்தும் ஒருவருக்கு தாரமாக்குகிறது சூழ்நிலை. மனைவியின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் சரவணன் இறங்கியுள்ள நிலையில் சந்தியாவாக நடித்து வரும் ஆலியா அதிகாரப்பூர்வமாக சீரியலை விட்டு விலகுகிறார்.

சந்தியாவுக்கு பதிலாக புது நடிகை:

விஜய் டிவியில் பிரமாண்ட வரவேற்பு காணப்பட்ட சீரியலில் ஒன்று ராஜா ராணி. அந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் சேர்ந்து நடித்தனர். 2017-ம் ஆண்டு சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் புதுமையான கதையை மக்கள் விரும்பும் வகையில் இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆலியாவும் அழகான புன் சிரிப்பினாலும், எதார்த்த நடிப்பினாலும் அதிகமாக மக்களிடையே பேசப்பட்ட ஒரு சின்னத்திரை கதாநாயகியானார்.

துளசியின் கணவர் தான் வருணா? பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இடையே ரியல் காதல் மலர்ந்து திருமணமும் ஆனது. இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதை தொடர்ந்து மக்களின் அதீத வரவேற்பால் மீண்டும் ராஜா ராணி 2 ஆரம்பமானது. இதில் சஞ்சீவுக்கு பதிலாக சித்து நடித்து வருகிறார். ஆலியா தன் ரோலை விட்டு கொடுக்காத வகையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் கனவில் இருக்கும் சந்தியா சூழ்நிலை காரணத்தால் ஸ்வீட் கடை வைத்திருக்கும் சரவணனுக்கு மனைவி ஆகிறார்.

ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா செல்வி, வசமாக மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆசையை மறைத்து புகுந்த வீட்டிற்கு ஏற்றார் போல மாற முழு முயற்சி செய்யும் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமான ஆலியா தற்போது நடிக்கும் சீரியலில் இருந்து ஆரம்ப கட்டத்திலே விலகி விடுவார் என்று நினைத்த போதிலும் அவர் தொடர்ந்து வயிற்றில் வளரும் குழந்தையுடன் சீரியலில் நடித்து வந்தார். தற்போது திடீரென எதிர் பார்க்காத நிலையில் சீரியலை விட்டு விலகி உள்ளார். இதைப் பற்றி பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஒரு புதிய நடிகை நடிக்கவுள்ளார். அவர் யாரென்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!