சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன் “ராஜா ராணி 2” ப்ரோமோ – விஜய் டிவி ரிலீஸ்!

0
சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன்
சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன் "ராஜா ராணி 2" ப்ரோமோ - விஜய் டிவி ரிலீஸ்!
சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன் “ராஜா ராணி 2” ப்ரோமோ – விஜய் டிவி ரிலீஸ்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில், தற்போது சேர்ந்து வாழ தொடங்கி விட்டது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ராஜா ராணி 2:

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா பையில் இருந்த விவாகரத்து பாத்திரத்தை பார்த்து தவறாக புரிந்து கொண்ட சரவணன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைக்கிறார். அவர் வெளியே சென்று எதிர்காலத்தை பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் பார்வதி கல்யாணத்தில் சந்தியா மீது சிவகாமி வழக்கம் போல பழி போட அதையே சாதகமாக பயன்படுத்தி சரவணன் சந்தியாவை வெளியே அனுப்புகிறார். அப்போது வீட்டில் பெரிய சண்டை நடக்கிறது.

மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

குடும்பத்தில் அனைவரும் தடுத்தும் சரவணன் கேட்கவில்லை. இந்நிலையில் சரவணன், சந்தியாவை பஸ் ஏற்றி விட பிரிய மனமில்லாமல் அதே பேருந்தில் செல்கிறார். அந்த பேருந்தில் விபத்து ஏற்பட இருவருக்கும் எதுவும் ஆகவில்லை. அதன் பின் இருவரும் மனம் விட்டு பேசி விடுகின்றனர். பின் வீட்டிற்கு வந்து சந்தோசமாக இருக்க சிவகாமி தன்னிடம் பொய் சொன்னதை நினைத்து கோவப்படுகிறார். அதற்கு சரவணன் மன்னிப்பு கேட்க, சரவணனை மன்னித்து பாசமாக இருக்கின்றனர்.

டாப் சீரியலில் இருந்து வெளியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் வெங்கட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் சரவணனும், சந்தியாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ தொடங்கியது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணனின் காயத்திற்கு சந்தியா மருந்து போட சரவணன் சந்தியாவை அணைத்துக்கொள்கிறார். இந்த நேரத்தில் சந்தியா ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை பற்றி சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் முதல் முறையாக சந்தியா சரவணன் காதல் காட்சிகள் பார்க்க நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!