மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

0
மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு -
மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ப்ரோமோ!
மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், காதல் திருமணம் செய்த ஒரே காரணத்தால் அம்மாவை பார்க்க முடியாமல் போகும் கண்ணன், அண்ணனை எதிர்த்து கேள்வி கேட்க, இதுவரை அமைதியாக இருந்த அண்ணி கோவப்பட்டு, நீ தான் அத்தைக்கு இப்படி ஆக காரணம் என சொல்ல, இறுதியாக கண்ணன் எடுக்கும் முடிவு பற்றி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் வெளி ஊருக்கு சென்ற நேரம் பார்த்து லட்சுமி அம்மா இறந்து விட போனை மறந்துவிட்டு சென்றதால் தகவல் சொல்ல முடியாமல் ஊர் மக்கள் அவரசத்தின் படி அம்மாவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மாலை ஊருக்கு வந்த கண்ணன் அம்மா இறந்த போஸ்டர் பார்த்து பதட்டமடைய அம்மாவை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என ஐஸ்வர்யா சொல்கிறார். உடனே கதறி அழுது கண்ணன் ஓட, அங்கே நேரமாகி விட்டது என கொல்லி வைக்க சொல்கின்றனர்.

டாப் சீரியலில் இருந்து வெளியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் வெங்கட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அப்போதும் கண்ணன் வரட்டும் என அண்ணன்கள் சொல்ல பெரியவர்கள் அவரசப்படுத்த வேறு வழி இல்லாமல் கொல்லி வைத்து விடுகிறார். தனம் மாசமாக இருப்பதால் மூர்த்தி மொட்டை போட வேண்டாம் என சொல்கிறார்கள். இந்நிலையில் கொல்லி வைத்த பின் கண்ணன் ஓடி வர, அம்மாவை கடைசி வரை பார்க்க முடியவில்லை என நினைத்து கதறி அழுகிறார். முல்லையின் அப்பா அவரை தடுக்க மற்றவர்கள் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்புகின்றனர். பின் ஐஸ்வர்யா உன்னை பார்க்க கூடாது என வேண்டுமென்றே இப்படி செய்தார்கள், என்னை கூட எதுவும் செய்யவிடவில்லை என சொல்ல, கோபத்தின் உச்சியில் இருந்த கண்ணன் மூர்த்தி வீட்டிற்கு சென்று கோபத்தில் கேள்வி கேட்கிறார்.

பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்!

என் அம்மாவை பார்க்க கூடாது என சொல்ல நீங்க எல்லாம் யாரு என கேட்கிறார். உடனே கோவப்பட்ட தனம் எழுந்து வந்து உன்னால் தான் அத்தைக்கு இப்படி ஆனது என சொல்ல, குற்ற உணர்ச்சியில் இருந்த கண்ணன் கதறி அழுகிறார். மறுநாள் இறுதி சடங்கு செய்ய அண்ணன் தம்பிகள் செல்ல, கண்ணன் அங்கே மொட்டை போட்டு பால் ஊற்றுகிறார், ஜனார்த்தனன் அவனை தடுக்க செல்ல மூர்த்தி அதை தடுக்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கண்ணனின் இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!