டாப் சீரியலில் இருந்து வெளியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் வெங்கட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
டாப் சீரியலில் இருந்து வெளியேறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலம் வெங்கட் - ரசிகர்கள் அதிர்ச்சி!
டாப் சீரியலில் இருந்து வெளியேறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலம் வெங்கட் - ரசிகர்கள் அதிர்ச்சி!
டாப் சீரியலில் இருந்து வெளியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் வெங்கட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர் நடிகர் வெங்கட், அவர் சன் டிவி டாப் சீரியலான ரோஜா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக ஷாக் செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் வெங்கட்:

விஜய் தொலைக்காட்சியில் இந்த வார TRPயில் முதலிடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெங்கட். அவர் சன் டிவியில் முதலிடத்தில் இருக்கும் சீரியலான ரோஜாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரோஜா சீரியலில் ஹீரோவின் தம்பி அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் பூஜா என்பவரை ஏமாற்றுவது போல நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் – திரை பிரபலங்கள் இரங்கல்!

இந்த இரண்டு சீரியல்களிலும் அவருக்கு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் ரோஜா சீரியலை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கு தான் நல்ல பெயர் உண்டு. இந்நிலையில் இவர் ரோஜா சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிது நாட்களாக அவர் ரோஜா சீரியலில் காட்டப்படவில்லை. ஆனால் இன்று வெளியான ரோஜா சீரியல் ப்ரோமோவில் பூஜா அர்ஜுனுக்கு போன் செய்து பேசுவது போல காட்டப்படுகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!

நாளைய எபிசோடில் அஸ்வின் பூஜாவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் இந்த செய்தி கேட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரோஜா அர்ஜுன் ஜோடியை போல, அஸ்வின் பூஜா ஜோடிக்கு ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேற என்ன காரணம் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த செய்தியால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!