விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் பார்வதி வைஷு வாங்கிய புத்தம் புதிய கார் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் பார்வதி வைஷு வாங்கிய புத்தம் புதிய கார் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியல் பார்வதி வைஷு வாங்கிய புத்தம் புதிய கார் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் பார்வதி வைஷு வாங்கிய புத்தம் புதிய கார் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியின் பிரபலங்கள் அனைவரும் வரிசையாக கார் வாங்கி வரும் நிலையில், அந்த லிஸ்டில் தற்போது ராஜா ராணி 2 பார்வதியும் சேர்ந்துள்ளார். இவர் புதிய கார் வாங்கிய வீடியோவை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்வதியின் புதிய கார்:

பருவமழை சீசன் போல் தற்போது சின்னத்திரை பிரபலங்களின் புதிய கார் வாங்கும் சீசன் தொடங்கியுள்ளது. வரிசையாக சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கார் வாங்கி வருகின்றனர். அதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். தங்களுக்கு அதிகம் பிடித்த பிரபலங்களின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்களும் மகிழ்ச்சியில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ராஜா ராணி 2 தொடரில் பார்வதியாக நடித்து வருபவர் வைஷூ.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – ரசிகர்கள் ஷாக்!

இவர் ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோக்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினார். அதன் பிறகு டிக் டாக் மூலமாக கிடைத்த புகழின் காரணமாக சின்னத்திரை வாய்ப்புகள் வந்தது. முதலில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய ரன் என்ற சீரியலில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. பல ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் வாய்ப்பு கிடைத்தது தான் இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் இருந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பார்வதியின் கல்யாணம் மற்றும் தீவிரவாதி பார்வதியை கடத்துவது என்று இவரை வைத்தே கதை நகர்த்தப்பட்டு வருகிறது. தற்போது பார்வதி வைஷூ சொந்தமாக ஸ்கோடா நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 13 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here