திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – ரசிகர்கள் ஷாக்!

0
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட "குக் வித் கோமாளி" ஷிவாங்கி - ரசிகர்கள் ஷாக்!
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பாடகி ஷிவாங்கிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது ஓய்வில்லாமல் உழைத்ததால் தான் இந்த நிலைமை வந்ததாக அவர் சொல்லி இருக்கிறார்.

நடிகை ஷிவாங்கி:

சின்னத்திரையில் சாமானிய மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் விஜய் டிவிக்கு தனி பங்கு இருக்கிறது. அந்த வகையில் பாடல் நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வந்தவர் தான் ஷிவாங்கி. ஆனால் அவர் பாடல் மூலமாக இல்லாமல் குழந்தைத் தனமான குணத்தால் தான் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய அவரை குடும்பத்தில் ஒருத்தவராக பார்க்க தொடங்கினார்கள்.

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் “பாக்கியலட்சுமி” சீரியல்? கடுப்பான ரசிகர்கள்!

மூன்று சீசன்களின் வெற்றிக்கு ஷிவாங்கியின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. இந்நிலையில் ஷிவாங்கிக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் ஷிவாங்கி நடித்திருந்தார். சென்ற வாரம் அந்த படம் வெளியானதை அடுத்து ஷிவாங்கி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். தன்னுடைய படத்தின் முதல் ஷோ பார்க்க வேண்டும் என ஷிவாங்கி காலை 4 மணிக்கே தியேட்டர் வந்தார்.

Exams Daily Mobile App Download

அது மட்டுமல்லாமல் ஷிவாங்கி பல ஆல்பம் பாடங்களை பாடி பிசியாக இருந்து வருகிறார். குக் வித் கோமாளி ஷூட்டிங் இரவு 11 மணி வரை நடந்ததால் ஷிவாங்கிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஓய்வின்றி உழைத்து கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரியர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உடல்நிலை முக்கியம் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஷிவாங்கி விரைவில் உடல்நிலை தேறி வர வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!