தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

4
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் முதல், இரண்டாம் அலை என்று இடைவிடாது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பள்ளி மாணவர்கள் தான். ஓரளவு தொற்று குறைந்தவுடன் ஊரடங்கில் இருந்து மற்ற தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மேலும் ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்களின் நிலை குறித்த அச்சமும் எழுந்தது.

ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – பிரதமர் உத்தரவு!

இந்த நிலையில் கடந்த 2021 ஜனவரி மாதம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டனர். பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று முடிந்தது. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பாதிப்புகள் குறைந்தவுடன் கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜன.19 முதல் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் – ஆசிரியர்கள் கவனத்திற்கு!

இந்த நிலையில் ஓமிக்ரான் தொற்று தீவிர பரவி வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூருக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் சாலையில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிளஸ் 2விற்கு எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரு வேளை ஆல் பாஸ் அறிவித்தல் மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. பொது தேர்வு நடத்தப்பட வேண்டும் அப்படி நடத்தவில்லை என்றால் கல்லூரி சேர்க்கையில் பிரச்சினை ஏற்படும்

  2. Present situation
    Critical situation for India,corona and omicron are fastly spreading, I hope understood the government for children life, so that government offers to 10th and 12th students to all pass

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!