‘உனக்காக வீடு கட்டும் பிளானை நிறுத்த முடியாது’ – முல்லையை கண்டபடி திட்டிய மீனா!

0
'உனக்காக வீடு கட்டும் பிளானை நிறுத்த முடியாது' - முல்லையை கண்டபடி திட்டிய மீனா!
'உனக்காக வீடு கட்டும் பிளானை நிறுத்த முடியாது' - முல்லையை கண்டபடி திட்டிய மீனா!

‘உனக்காக வீடு கட்டும் பிளானை நிறுத்த முடியாது’ – முல்லையை கண்டபடி திட்டிய மீனா!

தற்போதைக்கு வீடு கட்டுவது தான் முக்கியம். உனக்காக அனைவருக்கும் சொந்தமான வீட்டை பாதியிலேயே விட முடியாது என முல்லையிடம் மீனா சண்டைபோடும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முல்லை சிகிச்சை எடுத்துக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். குழந்தை பிறக்காததை மிக பெரிய குறையாக முல்லை நினைத்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள குடும்பத்தினர் எவரின் முகத்தையும் பார்க்க முடியாமல் ஏங்கி கொண்டிருக்கிறார்.

இதற்கு பிறகு தான் செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு அதிகமாக செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் குடும்பத்தினர்கள் விழித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி ஒரு ஐடியா கூறுகிறார். அதாவது தற்போது வீடு கட்டுவதை அப்படியே நிறுத்தி வைக்கலாம். அந்த பணத்தை வைத்து முல்லைக்கு மருத்துவம் பார்க்கலாம் என கூறுகிறார். ஆனால் மீனாவிற்கு இந்த பிளான் சுத்தமாக பிடிக்கவே இல்லை. அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என சொல்லி சண்டை போடுகிறார்.

பின்பு முல்லையிடம் ஒருவர் கோவிலுக்கு பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார். எப்படியும் இவர்கள் செயற்கை முறையில் சிகிச்சை எடுக்கமாட்டார்கள் என நினைத்து பரிகாரம் செய்யலாம் என நினைக்கிறார். ஆனால், பரிகாரம் செய்ய வீட்டில் உள்ள யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், மீண்டும் முல்லையிடம் வந்து மீனா உனக்கு தற்போது 25 வயது தான் ஆகிறது. அதற்குள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறாய். தற்போதைக்கு வீடு கட்டுவது தான் முக்கியம் என மீனா முல்லையிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here