ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு போலியானதா? உண்மையானதா? கண்டறிவதற்கான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக உள்ளது. இதனால் தற்போது பல்வேறு இடங்களில் போலியான ஆதார் கார்டு மூலமாக மோசடிகள் நிகழ்த்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை ஆதார் கார்டை தயாரிக்கும் நிறுவனமான UIDAI வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் பல்வேறு சேவைகளில் தற்போது ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதில் குறிப்பாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துவது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் முக்கியமானதாக உள்ளது. ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் இது 12 இலக்க அடையாள எண்ணும் உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 4 முதல் புது விதிமுறை!

தற்போது போலியான ஆதார் கார்டு மூலமாக மோசடிகள் நிகழ்த்தப்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக UIDAI தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, அனைத்து விதமான ஆதார் கார்டுகளையும் உண்மையானதா அல்லது போலியானதா என்று நேரடி முறையிலும் அல்லது ஆன்லைன் முறையிலும் கண்டறியலாம். இதற்கு இ ஆதாரில் உள்ள QR கோட் ஸ்கேன் செய்ய வேண்டும். அத்துடன் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற இணையதள முகவரிக்கு சென்று 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டும் கண்டுபிடிக்க முடியும்.

தற்போது ஆதார் கார்டு போலியானதா என்பதை ஆன்லைன் முறையில் சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1.முதலில் UIDAIயின் https://resident.uidai.gov.in/offlineaadhaar என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது ‘Aadhaar Verify’ என்ற ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும் அல்லது https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar தளத்திற்கு செல்ல வேண்டும்.

3. இதனை தொடர்ந்து 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க virtual ID- ஐ உள்ளிட வேண்டும்.

4. அடுத்த பக்கத்தில் தோன்றும் நம்பரை டைப் செய்ய வேண்டும். இப்போது திரையில் கேட்கப்படும் security codeஐ உள்ளிட வேண்டும்.

5. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இதனை உள்ளிட வேண்டும்.

6. இறுதியாக தங்களின் ஆதார் கார்டு உண்மையானதா அல்லது போலியா என்பது திரையில் காண்பிக்கப்படும்.

7. மேலும் இதில் தங்களின் பெயர், மாநில விவரம், வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!